Prepaid Data Recharge Pack: இந்திய தொலைத்தொடர்பு துறையை பொறுத்தவரை தற்சமயம் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த இரு பெரு நிறுவனங்களை அடுத்த இந்திய தொலைதொடர்பு துறையில் வோடபோன் ஐடியா நிறுவனம் (Vodafone Idea) விளங்கி வருகிறது. மற்ற இரு நிறுவனங்களை போல் இல்லாமல் இன்னும் வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை கொண்டுவரவில்லை.
இருப்பினும், கடும் போட்டிக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களையும், சலுகைகளையும் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதேபோல், தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் நடைமுறையில் உள்ள டேட்டா பேக்குடன் சிறப்பான சலுகையை வழங்கி உள்ளது.
இந்த டேட்டா பேக் மூலம், வழக்கமாக கிடைக்கும் நன்மைகள் மட்டுமில்லாமல் பயனர்களுக்கு போனஸ் டேட்டாவையும் இந்நிறுவனம் வழங்குகிறது. அந்த வகையில், நீங்களும் வோடபோன் ஐடியா பயனராக இருந்தால், இந்தச் சலுகையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் விலை மற்றும் போனஸ் டேட்டா தொடர்பான அனைத்து விவரங்களையும் இதில் காணலாம்.
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் டேட்டா பேக்கின் விலை 181 ரூபாய் ஆகும். முன்னர் கூறியது போல், இது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வழக்கமான டேட்டா பேக் ஆகும். இது பயனர்களின் கூடுதல் டேட்டா தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது. அதாவது இந்த டேட்டா பேக்கின் பலன்களைப் பெற உங்களுக்கு ஒரு தனி அடிப்படைத் திட்டம் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளவும்.
அடிப்படை திட்டம் என்றால் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் தொடர்பான வசதிகளை உங்களுக்கு வழங்கும் திட்டமாகும். தற்போதைய அடிப்படைத் திட்டத்தில் போதுமான டேட்டா கிடைக்கவில்லை என்றாலோ அல்லது டேட்டா முடிந்துவிட்டாலோ, வோடபோன் ஐடியா தரும் இந்த டேட்டா பேக்கை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
181 டேட்டா பேக் நன்மைகள்
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 181 ரூபாய் டேட்டா பேக் நன்மைகள் குறித்து இதில் பார்த்தால், இந்த திட்டத்தில் பயனர்கள் தினமும் 1ஜிபி டேட்டாவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறுகிறார்கள். அதன்படி, இந்த திட்டம் உங்களுக்கு மொத்தம் 30ஜிபி டேட்டாவை அணுகும். இருப்பினும், இது தவிர, நிறுவனம் சமீபத்திய சலுகையின் கீழ் பயனர்களுக்கு போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது, இதில் நீங்கள் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக 0.5 ஜிபி கூடுதல் தரவைப் பெறுவீர்கள். 0.5ஜிபி டேட்டாவின்படி, இந்த திட்டம் உங்களுக்கு 15ஜிபி டேட்டாவை 20 நாட்களில் தனித்தனியாக இலவசமாக கிடைக்கும்
போனஸ் டேட்டாவை பெறுவது எப்படி?
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. Vi செயலி மற்றும் அதன் இணையதள பயனர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும். வேறு ஏதேனும் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்தால் இந்த போனஸ் டேட்டா பலன் கிடைக்காது. எனவே, Vi செயலி அல்லது அதன் இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்துகொண்டு இந்த பலன்கலை அனுபவியுங்கள்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ