சென்னை: திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பட்டியலின இளம்பெண் கொடுமை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், விடுதலை சிலைத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மவுனம் கலைத்து கண்டனம் தெரிவித்து உள்ளார். திமுக எம்எல்ஏ குடும்பத்தினரால் பட்டியலின இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்டுள்ள விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பட்டியலின மக்களுக்காக கட்சி நடத்தி வரும் திருமாவளவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்த விசிக தலைவர் திருமாவளவன், இந்த சம்பவம், “மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் […]
