A View Of Ram Temple From Space, Courtesy Indias Swadeshi Satellites | செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட ராமர் கோவில் புகைப்படங்கள்

அயோத்தி: உ.பி.,யின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை(ஜன.,22) நடைபெற உள்ளது.

இச்சூழ்நிலையில், இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் இஸ்ரோ எடுத்த ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

கடந்த மாதம் (2022 டிச.,16) அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் 2.7 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் தெரிவதுடன், கோவிலின் சுற்றுப்புறங்களும் தெரிகிறது.

latest tamil news

மேலும், இந்த புகைப்படங்களில், அயோத்தியில் புகழ்பெற்ற தசரதர் மஹால், சரயு நதி, புதிதாக புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம் ஆகியவையும் தெளிவாக தெரிகின்றன.

ஜொலிக்கிறது ராமர் கோயில்

இதனிடையே, இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் கோயிலின் புகைப்படங்கள் மற்றும் உட்பிராகரங்களில் அலங்கரிக்கப்பட்ட படங்களையும் ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.