காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, லோக் சபா தேர்தலுக்கு முன்பாக `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்ற பெயரில் தன்னுடைய இரண்டாவது யாத்திரையை ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். மணிப்பூர் முதல் மும்பை வரை 15 மாநிலங்களில், மொத்தம் 6,713 கி.மீ தூரம் யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, கடந்த நான்கு நாள்களாக அஸ்ஸாம் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

அஸ்ஸாமில் இந்த யாத்திரையின்போது, `இந்தியாவிலேயே அதிகளவில் ஊழல் மிகுந்த மாநிலம் அஸ்ஸாம். மிகப்பெரிய ஊழல்வாதி அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா’ என்று பா.ஜ.க அரசை ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் மாள்வியா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் X சமூக வலைதளத்தில் சிறிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் விமர்சித்திருக்கின்றனர். அந்த வீடியோவில், ராகுல் காந்தி பேருந்தில் அமர்ந்தபடி யாத்திரையில் சென்றுகொண்டிருக்க, சாலையோரத்தில் இந்து ஆதரவாளர்கள் கூட்டமாக காவி கொடியை ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகின்றனர். பின்னர், ராகுல் காந்தி பேருந்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வேகமாக செல்வது போன்று இருந்தது.
Rahul Gandhi lost his cool after Jai Shri Ram and Modi Modi slogans were raised in his presence. If this is how rattled he is, how will he face the people of this country in days ahead, after the anti-Hindu Congress rejected the invite to be part of the Pran Pratistha in Ayodhya? pic.twitter.com/XsBX4elSBG
— Amit Malviya (@amitmalviya) January 21, 2024
இந்தப் பாதி வீடியோவை வெளியிட்ட அமித் மாள்வியா, “ராகுல் காந்தி முன்னிலையில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதையடுத்து அவர் பொறுமை இழந்துவிட்டார். இதற்கே இப்படிப் பதற்றப்படுகிறார் என்றால், இந்து விரோத காங்கிரஸ் அயோத்தி பிரதிஷ்டை அழைப்பை நிராகரித்த பிறகு, வரும் நாள்களில் இந்த நாட்டு மக்களை அவர் எப்படி எதிர்கொள்வார்?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
அதேபோல், ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ராமர் கோயில் பிரதிஷ்டைகு முன்னிட்டு, ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட ராம பக்தர்களுக்கு முழு உரிமை உண்டு. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவதால் ராகுல் காந்தி தனது பொறுமையை இழக்கக் கூடாது. மேலும், அவர் வன்முறையைத் தூண்டவோ, பொதுமக்களை அச்சுறுத்தவோ முடியாது” என விமர்சித்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்தி தற்போது அதன் முழு வீடியோவையும் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
सबके लिए खुली है मोहब्बत की दुकान,
जुड़ेगा भारत, जीतेगा हिंदुस्तान। pic.twitter.com/Bqae0HCB8f— Rahul Gandhi (@RahulGandhi) January 21, 2024
அந்த வீடியோவில், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி பேருந்திலிருந்து இறங்கிச் சென்ற ராகுல் காந்தி, மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்த பின், அவ்வாறு முழக்கமிட்டவர்களை நோக்கி சிரித்த முகத்துடன் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார். இந்த முழு வீடீயோவைப் பதிவிட்டதோடு மட்டுமல்லாமல், “அன்பின் கடை அனைவருக்கும் திறந்திருக்கும். இந்தியா நிச்சயம் ஒன்றுபடும். இந்தியா வெல்லும்” எனவும் ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY