Ram Temple Consecration: The banks of the Sarayu River lit up in lamplight | ராமர் கோயில் பிரதிஷ்டை: தீப ஒளியில் ஜொலித்த சராயு நதிக்கரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியின் சராயு நதிக்கரை மின் விளக்குகளால் ஜொலித்தது. நாடு முழுதும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரமாண்டமாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள கோவிலில் ராம சிலைக்கு பிரதமர் மோடி பூஜை செய்து பிராண பிரதிஷ்டை செய்தார்.

இதையடுத்து சராயு நதிக்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து மாலை வீடு தோறும் கார்த்திகை தீபம் போல அகல் விளக்குகளில் தீபமேற்றி ஒளியேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பல்வறு இடங்களில் விளக்கேற்றி வழிபட்டனர்.

நேபாளில் பிரசித்திபெற்ற ஜனக்புரி என்ற இடத்தில் உள்ள கோயிலில் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.