கான்பெரா ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின், பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி வகித்து வந்தார். இவர் ஆஸ்திரேலியாவின் லிபரல் கட்சியின் தலைவர் ஆவார். ஸ்கார் மோரிசன் கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், ரகசியமாகப் பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் என்பது அப்போது பேசு பொருளானது. […]
