Monkey came to Ram Temple: | ராமர் கோயிலுக்கு வந்து சென்ற அனுமன்: பக்தர்கள்பரவசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்குள் குரங்கு நுழைந்தது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி 11 நாட்கள் விரதம் மேற்கொண்ட பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார். இதையடுத்து கோயிலுக்கு பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா ‛ எக்ஸ் வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் நேற்று மாலை கோயில் தெற்கு நுழைவாயில் வழியாக நுழைந்த குரங்கு கருவறைக்குள் நுழைய முயன்றது. பின் உற்சவர் சிலை அருகே சிறிது நேரம் நின்று விட்டு வடக்கு நுழைவு வழியாக வந்து பின் கிழக்கு வாசல் வழியே வெளியேறியது. இதனை அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்தவர்கள், பக்தர்கள் குரங்கின் செயற்கையை கவனித்தனர்.

பால ராமரை பார்ப்பதற்காக ஹனுமனே நேரில் வந்தார் என்றும், அவரை பாதுகாக்கும் பணியை ஹனுமன் தொடர்ந்து மேற்கொள்கிறார் என்பதற்கான அடையாளமாக இந்த நிகழ்வு தோன்றியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.