விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. விசிக-வின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டிற்காக திருச்சி அருகே உள்ள சிறுகனூரில் 50 ஏக்கர் பரப்பளவிலுள்ள நிலத்தில், 500 மீட்டர் அகலம், 1000 மீட்டர் நீளத்திற்கு மாநாடு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடல் அருகே ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டுத் திடலின் பின்புறம், முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுக்காக வாகன நிறுத்துமிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், `வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்களை பகிர்ந்திருக்கிறார். அதில்,”
-
சனநாயகம் காக்க உயிரீந்த ஈகியருக்கு வீர வணக்கம்!
-
நூற்றாண்டு காணும் ஆளுமைகளுக்கு வீர வணக்கம்!
-
பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு நல்குக!
-
பெரும்பானமைவாத அரசியலைப் புரக்கணிப்போம்.
-
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுக!
-
சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவித்திடுக!

-
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திடுக
-
ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிடுக
-
தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை திரும்பப் பெறுக
-
ஒப்புகைச் சீட்டுகளைன் அடிப்படையில் தேர்தல் நடத்திடுக
-
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வருக.
-
தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்க.
-
கஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
-
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை செயல்படுத்துக
-
உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாநில அரசுகளே நியமிக்க வேண்டும்.
-
வழக்காடு மொழியாக தமிழை அறிவித்திடுக.
-
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை திரும்பப் பெறுக.
-
ஆளுநர் பதவியை ஒழித்திடுவோம்.
#வெல்லும்சனநாயகம்
வெல்லும் சனநாயகம் மாநாடு
தீர்மானங்கள்
1/8 pic.twitter.com/k4XsfAJEhl— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 26, 2024
-
ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதை கைவிடுக.
-
16-வது நிதிக்குழுவில் நிதிப்பகிர்வு நீதியை நிலைநாட்டுக.
-
மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும்.
-
சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
-
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றிடுக
-
வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக.
-
அமைச்சரவையிலும், மேலவையிலும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒத்துக்கீடு வழங்கிடுக.
-
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுக.
-
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்க.
-
கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்க.
-
நீட் தேர்வை ரத்து செய்க, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ந்திடுக.

-
பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக
-
பழங்குடியினரைக் கொத்தடிமையில் ஈடுபடுத்துவதைத் தடுத்திடுக
-
வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுக” ஆகிய தீர்மானங்கள் இடம்பெற்றுள்ளன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY