சேலம்: தமிழ்நாட்டு மக்களைப் பற்றி கவலையில்லை, ஆனால், தனது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களை வரவேற்று பேசிய இபிஎஸ், ” அதிமுகவின் 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் […]