5ஜி அன்லிமிடெட் திட்டங்கள்: ஜியோ, ஏர்டெல் முடிவு – வாடிக்கையாளர்கள் அப்செட்

இந்தியாவில் 5ஜி சேவைகள் 2022 அக்டோபரில் தொடங்கப்பட்டன. அதிலிருந்து ஜியோவும் ஏர்டெலும் சேர்ந்து 125 மில்லியனுக்கும் அதிகமான 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர். தற்போது உள்ள 4ஜி விலையில் 5ஜி சேவையை வழங்கியும், சில திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கியும் வாடிக்கையாளர்களை 5ஜிக்கு மாற செய்தன இந்த நிறுவனங்கள். ஆனால், எதிர்காலத்தில் அன்லிமிடெட் திட்டங்களை நிறுத்திவிட்டு, 5ஜி திட்டங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க இருக்கின்றனவோ என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

2024 இரண்டாம் பாதியில், அதாவது பிற்பகுதியில் இருந்து ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான கட்டணத்தை 4ஜி கட்டணத்தைவிட குறைந்தது 5-10% அதிகரிக்கக்கூடும் என எக்னாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் 5ஜிக்கு மாறுவதால் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 2024 இறுதிக்குள் இந்தியாவில் 5ஜி பயனர்கள் எண்ணிக்கை 200 மில்லியனை தாண்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 2024 காலாண்டில் மொபைல் கட்டணத்தை 20% வரை உயர்த்தி, மூலதன மீதான வருவாயை (RoCE) அதிகரிக்க இருக்கின்றனவாம்.
5ஜி திட்டங்களில் விலை உயர்வு இருந்தாலும், டேட்டா அளவு 30-40% அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், இன்னும் 5ஜி சேவையை தொடங்காத வோடபோன் ஐடியாவை சந்தையில் பின்னுக்குத் தள்ளுவதே இதன் நோக்கமெனக் கருதப்படுகிறது.

5ஜி மற்றும் 4ஜி வித்தியாசம் என்ன?

4ஜி மற்றும் 5ஜி இரண்டும் செல்போன் நெட்வொர்க்கின் இரண்டு வெவ்வேறு தலைமுறைகள். 4ஜி என்பது நான்காவது தலைமுறை செல்போன் நெட்வொர்க், 5ஜி என்பது ஐந்தாவது தலைமுறை செல்போன் நெட்வொர்க். 4ஜி மற்றும் 5ஜி இடையேயான முக்கிய வேறுபாடுகள் என்னவென்றால், அதிக வேகம். 5ஜி 4ஜியை விட அதிக வேகமான இணைப்பை வழங்குகிறது. 4ஜி தரவு வேகம் அதிகபட்சம் 100 Mbps ஆகும், ஆனால் 5ஜி தரவு வேகம் 10 Gbps வரை இருக்கலாம். இரண்டாவதாக, அதிக திறன். 5ஜி 4ஜியை விட அதிக திறன் கொண்டது. 

4ஜி ஒரு சதுர கிலோமீட்டரில் 100,000 சாதனங்களைக் கொண்டிருக்க முடியும். ஆனால் 5ஜி ஒரு சதுர கிலோமீட்டரில் 1 மில்லியன் சாதனங்களைக் கொண்டிருக்க முடியும். 5ஜி அதிக வேகமான இணைப்பை வழங்குகிறது, இது வீடியோ ஸ்ட்ரீமிங், விளையாட்டுகள், மற்றும் பிற செயல்பாடுகளை மிகவும் இனிமையானதாக மாற்றுகிறது. 5ஜி குறைந்த பத்துப்புள்ளியைக் கொண்டுள்ளது, இது இணைப்பு மிகவும் நிலையானதாக மாற்றுகிறது. 5ஜி அதிக திறன் கொண்டது, இது பல சாதனங்கள் ஒரே நேரத்தில் இணைய அனுமதிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.