Porsche Macan Turbo EV – ₹1.65 கோடியில் போர்ஷே மக்கன் டர்போ EV விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள போர்ஷே மக்கன் (Porsche Macan) டர்போ எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் விலை ரூ.1.65 கோடி ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் Macan 4 மற்றும் Macan Turbo என விற்பனை செய்யப்படுகின்றது.

மக்கன் எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ள 95kWh பேட்டரியை பெற்று Macan 4, 5.2 வினாடிகளில் 0-100kph வேகத்தையும் மணிக்கு அதிகபட்சமாக 220kph எட்டும் திறனுடன் 408hp பவர் மற்றும் 650Nm டார்க் வழங்குகிறது. Macan Turbo மாடல்  639hp மற்றும் 1,130Nm டார்க் வழங்குகிறது, இது 3.3 வினாடிகளில் 0-100kph மற்றும் 260kph அதிகபட்ச வேகத்தை எட்டுகின்றது..

270kW DC சார்ஜர் 800V மூலம் சார்ஜ் செய்ய முடியும், 21 நிமிடங்களுக்குள் 10-80 சதவீதம் டாப்-அப் தருவதாக போர்ஷே தெரிவித்துள்ளது.

240kW வரை பவர் பிரேக்கிங் மற்றும் வேகத்தை குறைப்பதன் மூலம் ரீஜெனரேட்டிவ் செய்ய முடியும் என்பதனால், அதிகாரப்பூர்வ WLTP ரேஞ்ச் ஆனது Macan 4 மாடலுக்கு 613km மற்றும் Macan Turbo வேரியண்டுக்கு 591km என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எலெக்ட்ரிக் மக்கன் தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள ICE மாடல் போலவே இருக்கிறது. இது தனித்துவமான நான்கு புள்ளி ரன்னிங் எல்இடி விளக்கு, பிளவுபட்ட எல்இடி ஹெட்லேம்ப், பிரேம்லெஸ் கதவுகள், பின்புறத்தில் இணைக்கப்பட்ட எல்இடி பார், கூபே-ஸ்டைல் பாடி மற்றும் 22-இன்ச் அலாய் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

porsche macan turbo-ev

வளைவான 12.6 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரை பெறுகின்ற போர்ஷே மக்கன் 10.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் , ஏர்கான் கன்ட்ரோல்களுக்கான பிசிக்கல் பட்டன்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் முன்பக்க பயணிகளுக்கு விருப்பமான 10.9 இன்ச் திரை ஆகியவற்றுடன் வருகிறது.

குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஐந்து டிகிரி அதிகபட்ச கோணம் கொண்ட விருப்பமான பின்-சக்கர ஸ்டீயரிங் வீல், போர்ஷே ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் போர்ஸ் இழுவை மேலாண்மை ஆகியவை அடங்கும்.

போர்ஷே மக்கன் டர்போ EV மின்சார எஸ்யூவியை முன்பதிவு செய்பவர்களுக்கு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் டெலிவரி துவங்க உள்ளது.

Follow us on Google News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.