புதுடெல்லி: 2011-ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகம், உயர்கல்வி தொடர்பாக அகில இந்திய கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதன்படி, நாட்டிலேயே அதிக கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 8,375 கல்லூரிகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் 2-வது இடத்தில் மகாராஷ்டிரா (4,692), 3-வது இடத்தில் கர்நாடகா (4,430), 4-வது இடத்தில் ராஜஸ்தான் (3,934), 5-வது இடத்தில் தமிழ்நாடு (2,829) உள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் மத்திய பிரதேசம் (2,702), ஆந்திர பிரதேசம் (2,602), குஜராத் (2,395), தெலங்கானா (2,083), மேற்கு வங்கம் (1,514) ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதிக கல்லூரிகள் கொண்ட நகரமாக பெங்களூரு உள்ளது. அங்கு 1,106 கல்லூரிகள் உள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் ஜெய்ப்பூர் (703), ஹைதராபாத் (491), புனே (475) ஆகியவை உள்ளன.