புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தன்று, டெல்லியில் தொழில் முனைவோர்கள் இடையே, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
அப்போது புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசுமேற்கொண்டுவரும் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார்.
அவர் மேலும் பேசும்போது, “இந்தியாவில் தற்போது புதியஉருவாக்கங்கள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 10 மாதங்களில் மட்டும் இந்திய காப்புரிமை அலுவலகம் 75,000 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கியுள்ளது. இது இந்தியாவின் கண்டுபிடிப்புதிறனுக்கு சாட்சியாக உள்ளது.அறிவுசார் காப்புரிமையை நவீனப்படுத்த சட்டம் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.