சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஜாதி இல்லை; மதம் இல்லை’ என, தனக்கு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, தாசில்தார் மற்றும் கலெக்டர் பரிசீலிக்க உத்தரவிடும்படி கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த, சென்னை ஐகோர்ட் நீதிபதி, ”அரசு உத்தரவு, விதிகள் எதுவும் இன்றி, தங்கள் விருப்பப்படி சான்றிதழ்களை தாசில்தார்கள் வழங்க முடியாது. ‘ஜாதி, மதம் அற்றவர்’ என சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ” ஜாதி, மத மற்றவர் சான்று வழங்க சட்டத்தில் இடமில்லை என்றால் ஜாதிகள் ஒழிப்பு சாத்தியப்படுமா?” என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement