புதுடில்லி: முன்னாள் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது பாரத ரத்னா விருது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி மகிழ்ச்சி
” இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவரது பார்லி., பணிகள் என்றும் பாராட்டுதலுக்குரியது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. தகவல் துறை மற்றும் உள்துறை என சிறந்த பணியாற்றிய அத்வானி அனைவராலும் மதிக்கப்படும் நபர் ஆவார். ” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விருது தொடர்பாக பிரதமர் மோடி, அத்வானியை போனில் தொடர்பு கொண்டு மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.
இதுவரை பாரத ரத்னா விருது வாங்கியவர்கள்
*முன்னாள் ஜனாதிபதிகள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பிரசாத், ஜாகிர் உசேன், விவி கிரி,அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி,
*முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய்
*தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர்
*அம்பேத்கர், சர்தர் வல்லபாய் படேல், அபுல் கலாம் ஆசாத்
*அன்னை தெரசா
*இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி
*தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா.
*தொழிலதிபர் ஜேஆர்டி டாடா
*இயக்குநர் சத்யஜித்ரே
*முன்னாள் இடைக்கால பிரதமர் குல்ஜாரிலால் நந்தா
*விஞ்ஞானி சர் சி.வி.ராமன்
*கர்நாடக இசைக்கலைஞர் எம்எஸ் சுப்புலட்சுமி
*முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் சுப்ரமணியம்
*சமூக சீர்திருத்தவாதி ஜெய்பிரகாஷ் நாராயன்
*பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்
*பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர்
*முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்
*சமூக சீர்திருத்தவாதி வினோபா பாவே
*சுதந்திர போராட்ட வீரர் பக்வன்தாஸ்
*மைசூர் திவான் விஸ்வேஸ்வர்யா
*சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த் பல்லப் பன்ட்
*சமூக சீர்திருத்தவாதி டார்சோ கேசவ் கர்வே
*சமூக சேவகர் பிதன் சந்திரா போஸ்
*உ.பி., சட்டசபை முன்னாள் சபாநாயகர் புருஷோத்தம் தாஸ்
*மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாண்டுரங் வாமன் கேன்
*பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் கபார் கான்
*சுதந்திர போராட்ட வீராங்கனை அருணா ஆசாப் அலி
*அசாம் முதல் முதல்வர் கோபிநாத் போர்டோலால்
*ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் ரவிசங்கர், பிஸ்மில்லா கான், பீம்சென் ஜோஷி
*கல்வியாளர் சிஎன்ஆர் ராவ்
*காங்கிரஸ் முன்னாள் தலைவர் மதன் மோகன் மாலவியா
*அசாமை சேர்ந்த கவிஞர், பாடகர் பூபென் ஹசாரிக்கா
*சமூக சீர்திருத்தவாதி நானாஜிதேஷ்முக்
*பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்