வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். அவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
டில்லி ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் பெயர் ரியாஸ் அஹமது எனவும், கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இவர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதும், கூட்டாளிகளுடன் இணைந்து எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு வந்து டில்லி மற்றும் காஷ்மீரில் நாசவேலைகளில் ஈடுபட சதி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement