டில்லி காங்கிரஸ் கட்சி கார்கே பிரதமராவதை ஏற்றுக் கொள்ளுமா என தேவேகவுடா கேட்டுள்ளார். மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா பங்கேற்றார். தமது வாழ்நாளின் இறுதியில் தனது அரசியல் போக்கை மாற்றிக்கொண்டதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு தேவேகவுடா பதிலளித்தார். அவர் செய்தியாளர்களிடம்,, “எனது ஜனதா தளம் (எஸ்) கட்சியை அழிக்க நினைத்த சில காங்கிரசாரிடம் இருந்து கட்சியைக் காப்பதற்காகவே பாஜகவிற்கு நான் ஆதரவளித்தேன் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக முதல்வராகப் பதவியேற்க […]
