புதுடில்லி:பணத் தகராறில் 22 வயது வாலிபரை துப்பாக்கியால் சுட்ட ஐந்து பேரை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.
டில்லியில் பழைய இரும்புப் பொருட்கள் வியாபாரம் செய்பவர் ஷாரூக்,22. இவருக்கும் அதே தொழிலில் உள்ள பர்மன், பாசில், பிரின்ஸ், பைசல் மற்றும் வாஹித் ஆகியோருக்கும் இடையே பணத் தகராறு இருந்தது.
சாஸ்திரி பூங்கா சி பிளாக் அருகே நேற்று முன் தினம் இரவு 10.20 மணிக்கு ஷாருக்கை வழிமறித்த ஐந்து பேரும் வாக்குவாதம் செய்தனர்.
அதில் ஒருவர் திடீரென கைத்துப்பாக்கியால் ஷாரூக் வயிற்றில் சுட்டார். இதையடுத்து ஐந்து பேரும் தப்பி ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷாரூக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஜி.டி. அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஷாருக் மீது ஏற்கனவே கொள்ளை, வழிப்பறி, ஆயுத விற்-பனை உட்பட 13க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.
மேலும், இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சாஸ்திரி பூங்கா போலீசார், பர்மன், பாசில், பிரின்ஸ், பைசல் மற்றும் வாஹித் ஆகிய ஐந்து பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement