Another Indian massacre continues in America | மற்றொரு இந்தியர் படுகொலை அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள ஓர் உணவகத்தின் வெளியே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் வாஷிங்டனின் புறநகர் பகுதியான அலெக்சாண்டாரியாவில் வசித்தவர் விவேக் தனேஜா, 41.

இந்திய வம்சாவளியான இவர், டைனமோ டெக்னாலஜிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனராக பதவி வகித்து வந்தார்.

இவர், கடந்த 2ம் தேதி, வாஷிங்டன் நகரில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்ற நிலையில், தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விவேக் தனேஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி விவேக் தனேஜா கடந்த 7ம் தேதி இறந்தார்.

இதுகுறித்து போலீசார் கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்தனர்.

இதில், விவேக் தனேஜாவை சிலர் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளதை கண்டறிந்தனர்.

தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து தகவல் அளித்தால் 20.75 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக, இந்திய மாணவர்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு நபர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. இது, அங்கு வசிக்கும் இந்தியர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.