ரசிகர்கள் ரகளையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஹரிஹரன் இசை நிகழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு இலங்கை யாழ்ப்பாணம் முற்ற வெளிப்பகுதியில் நேற்று இரவு வெகு விமர்சையாக பிரமாண்ட மேடையில் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை தமன்னா, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா, ரம்பா, சின்னத்திரை நடிகர்கள் புகழ், பாலா, சான்டி மாஸ்டர், ஆலியா மானசா, சஞ்சீவ், மைனா நந்தினி, கலா மாஸ்டர், ரட்சிதா மகாலட்சுமி, ஸ்டான்லி, டிடி, மற்றும் பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அங்கு வந்திருந்த பல திரைப்பட நட்சத்திரங்கள், அமைதியாக இருக்கும் படி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இளைஞர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் கலா மாஸ்டர், “ஆடியன்ஸ் ப்ளீஸ், ப்ளீஸ்… உங்க கால்ல விழுறோம். அமைதியாக இருங்க” என யாழ்ப்பாணம் இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டம், ரசிகர்கள் ரகளை மற்றும் அங்கு ஏற்பட்ட கலவரத்தால் ஹரிஹரன் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவங்களுக்கு மத்தியில், நடிகை தமன்னாவின் நடனம் ஒன்றுமட்டும் நிகழ்ச்சியில் நடந்தது. நிகழ்வின் முடிவில் பலர் காயமடைந்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.