Announcement of BJP candidates contesting Rajya Sabha elections | ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடில்லி : ராஜ்யசபாவில் காலியாகஉள்ள இடங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்பட்டியலை பா.ஜ.,நேற்றிரவு அறிவித்தது.

உத்தர பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங், சுதன்ஷு திரிவேதி, சவுத்ரி தேஜ்வீர் சிங், சாத்னா சிங், அமர்பால் மயூரா, சங்கீதா பால்வன்ட் மற்றும் நவீன் ஜெயின் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பீஹாரில் தர்மஷீலா குப்தா, பீம் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சத்தீஸ்கரில் ராஜ தேவேந்திர பிரதாப் சிங், ஹரியானாவில் சுபாஷ் பராலா, கர்நாடகாவில் நாராயண கிரிஷ்னாசா பாண்டகே, உத்தரகண்டில் மகேந்திர பட், மே.வங்கத்தில் சமிக் பட்டாச்சார்யா போட்டியிடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.