The mother put the baby in the oven | குழந்தையை ஓவனில் வைத்த தாய்

கன்சாஸ் : அமெரிக்காவில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளங் குழந்தையை, அதன் தாய் தொட்டிலில் போட்டு துாங்க வைப்பதற்கு பதில், தவறுதலாக உணவை சூடுபடுத்தும் ஓவனில் போட்டதில், குழந்தை உயிரிழந்தது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சாஸ் நகரைச் சேர்ந்தவர் மரியா தாமஸ், 26. ஒரு மாதத்திற்கு முன் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது; பச்சிளங் குழந்தையை தன் பராமரிப்பில் வைத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் தன் குழந்தை மூச்சு விடவில்லை என கூறி, கன்சாசில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்று உள்ளார். குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடல் முழுக்க கொடூரமான தீக்காயங்களுடன் குழந்தை இறந்த நிலையில் இருந்தது,

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரியாவிடம் நடத்திய விசாரணையில், குழந்தையை துாங்க வைக்க தொட்டிலில் போடுவதற்கு பதிலாக, தவறுதலாக ஓவனில் வைத்ததாக கூறினார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மரியா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரது தோழியர் தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.