சென்னை தமிழக அரசு 4000 பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நேற்றைய தமிழக சட்டப்பேரவை கூட்டம் நிறைவுக்குப் பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கவில்லை என கூறினார். போக்குவாரது துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை செயலகத்தில் அதற்கு பதில் அளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம், ”முதல்வர் மு க ஸ்டாலின் சமீபத்தில் 100 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். ஏற்கனவே உள்ள 99 புதிய […]