பாலக்காடு,கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பெருவெம்பை சேர்ந்தவர் ராஜேந்திரன், 34. மனநிலை பாதிக்கப்பட்ட இவர், மருத்துவரின் அறிவுரையின்படி நீண்ட காலமாக மாத்திரை உட்கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஓலை மேய்ந்த டீக்கடையை தீ வைத்து எரித்ததாக குற்றஞ்சாட்டி, 2010 பிப்., 18ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த விஜயன், 53, குஞ்சப்பன், 64, பாபு, 50, முருகன், 44, முத்து, 74, ரமணன், 45, முரளீதரன், 40, ராதாகிருஷ்ணன், 61, ஆகிய எட்டு பேர் ஒன்று கூடி, ராஜேந்திரனை மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதையடுத்து, புதுநகரம் போலீசார், எட்டு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நேற்று பாலக்காடு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரையும் குற்றவாளிகளாக நீதிபதி விநாயகர் ராவ் அறிவித்தார். எட்டு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement