Can you forget: Today is the 5th anniversary of the Pulwama attack | மறக்க முடியுமா: இன்று புல்வாமா தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம்

புதுடில்லி: புல்வாமா தாக்குதலின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று (பிப்.,14) அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 1989க்கு பிறகு 2019 பிப்., 14 மாலை 3.15 மணிக்கு காஷ்மீரில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஸ்ரீநகர் – ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற கான்வாய் மீது, சொகுசு காரில் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதிகள், தனது காரை மோதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது இந்தியாவையும், பாதுகாப்பு படையினரையும் பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: புல்வாமாவில் வீரமரணம் அடைந்த துணிச்சல் மிக்க வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.