An unaccounted amount of Rs 31 lakh was caught in the raid of the MLAs house and office | எம்.எல்.ஏ., வீடு, அலுவலகத்தில் ரெய்டு கணக்கில் வராத ரூ.31 லட்சம் சிக்கியது

பல்லாரி : காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவரது தந்தை, உறவினர்கள் வீடு, அலுவலகங்களில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத 31 லட்சம் ரூபாய் சிக்கி உள்ளது.

பல்லாரி நகர தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி, 34. கிரானைட் தொழிற்சாலை, கல்குவாரி உட்பட பல தொழில்கள் நடத்தி வருகிறார். சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில், எம்.எல்.ஏ., பரத் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவரது தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சூர்ய நாராயண ரெட்டியின் வீடு, உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் கடந்த 10, 11 ம் தேதிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

இந்த சோதனையின் போது பல சொத்து ஆவணங்கள், வணிகம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அசையும், அசையா சொத்துகள் இருப்பதும் தெரிந்தது. இதனுடன் கணக்கில் வராத 31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, பரத் ரெட்டி, அவரது உறவினர்களுக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.