India vs England: பிப்ரவரி 15 அன்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்டில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள, ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொடர் 1-1 என சம நிலையில் தற்போது உள்ளது. 3வது டெஸ்ட் போட்டியையும் கைப்பற்ற இந்தியா தயாராக உள்ளது. இருப்பினும், இந்த 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, கேஎல் ராகுல் காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.
இது இந்திய அணிகு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த காயம் சர்பராஸ் கானுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கே.எல்.ராகுலுக்குப் பதிலாக ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் 4வது இடத்தில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது. ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க, 3வது இடத்தில் சுப்மான் கில் விளையாடி வருகிறார். விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ரஜத் படிதார் அறிமுகமானார். அந்த டெஸ்டில் அவர் அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், அணியில் அவரது இடத்தை தக்கவைத்துள்ளார். 5வது இடத்தில் பேட்டிங் செய்ய உள்ளார்.
Being named in the Test squad
Day 1 jitters with #TeamIndia
Finding his seat in the bus
Jurel is a mixed bag of fun & emotions!#INDvENG | @dhruvjurel21 | @IDFCFIRSTBank pic.twitter.com/WQryiDhdHG
— BCCI (@BCCI) February 14, 2024
இது தவிர இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் பெயரில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கேஎஸ் பரத் மற்றபட உள்ளார். நீண்ட வாய்ப்பு வழங்கியும் அவர் பேட்டிங் செய்ய சிரமப்படுகிறார். இதனால் கே.எஸ்.பாரத்துக்குப் பதிலாக துருவ் ஜூரல் இந்தப் போட்டியில் அறிமுகமாக உள்ளார். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூன்று பேரும் ராஜ்கோட்டில் இந்திய அணிக்காக விளையாடுவார்கள். காயம் காரணமாக விசாகப்பட்டினம் டெஸ்டில் இருந்து வெளியேறிய ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட் தேவை. இதனால் குல்தீப் யாதவ் விளையாடும் லெவன் அணியில் இருந்து விலக உள்ளார். அக்சர் படேல் பேட்டிங்கிலும் பங்கு கொடுப்பார் என்பதால் அவர் வெளியேற வாய்ப்பு இல்லை. மறுபுறம், 2வது டெஸ்டில் விளையாடாத முகமது சிராஜ் இந்த போட்டியில் விளையாட உள்ளார், ஜஸ்பிரித் பும்ராவுடன் களமிறங்க உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உத்ததேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சர்ஃபராஸ் கான், ரஜத் படிதார், துருவ் ஜூயல் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்