குற்ற வழக்கில் தொடர்புடைய, பல ஆண்டுகளாய் காவல்துறைக்குத் தெரியாமல் தலைமறைவாகி இருப்பவர்கள், தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டவர்களைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்ற காவல்துறையின் அறிவிப்பு அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அந்த வரிசையில், ராஜஸ்தான் தேடப்படும் குற்றவாளி பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் பரிசு தொடர்பான செய்தி தற்போது வைரலாகியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் சிங்கானா பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் ‘யோகேஷ் மேக்வால்’ என்ற குற்றவாளி மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நபரோ போலீஸிடம் பிடிபடாமல் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்துவருகிறார். போலீஸும், அந்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைத்து மாநிலம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கு தகவலளித்து மிகத்தீவிரமாக தேடியும் வருகின்றனர். இருந்தும் இன்னும் பிடிபடவில்லை.
இந்த நிலையில்தான் ஒரு வருடமாகத் தலைமறைவாக இருக்கும் குற்றவாளி யோகேஷ் குறித்து தகவல் தெரிவித்தாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ அவர்களுக்கு `50 பைசா’ பரிசாக வழங்கப்படும் என்று ராஜஸ்தான் போலீஸ் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய ஜுன்ஜுன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர விஷ்னோய், “தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 பைசா பரிசு என அறிவித்திருப்பது சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆனால், சமூக வலைதளங்களில் குண்டர்களைப் பின்தொடர்பவர்களை இது பின்வாங்கச்செய்யும்.

குற்றவாளிகள் தலைக்கு அதிக பரிசு அறிவிப்பது, பொதுவாக இளைஞர்களைக் கவரும். எனவே, குற்றவாளிகளுக்கு இந்த சமூகத்தில் மதிப்பில்லை என்பதை உணர்த்தவே தற்போது புழக்கத்தில் இல்லாத 50 பைசாவை பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெகுமதிகள் ஒருபோதும் குற்றவாளிகளை உயர்வாகக் காட்டுவதாக மாறக்கூடாது” என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY