சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரைப்பயணத்தை கோலிவுட்டில் தொடர்ந்து வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமில்லாமல் பாடகராகவும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் மாவீரன் என்ற வெற்றி படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி அயலான் படம் வெளியானது.
