பெங்களூரு : மஹாராஷ்டிராவில் விளைச்சல் குறைந்துள்ளதால், கர்நாடகாவில் வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில், சில வாரங்களாகவே பூண்டின் விலை உச்சத்துக்கு சென்றது. ஒரு கிலோ 150, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டின் விலை, தற்போது, 500 முதல் 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 15 முதல், 20 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. இரண்டு நாட்களாக, பல நகரங்களில் வெங்காய விலை உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான மஹாராஷ்டிராவில், வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
பெங்களூரில் நேற்றைய நிலவரப்படி, சந்தைகளில், ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
முதல் ரக வெங்காயம், 25 ரூபாய் வரை விற்பனையானது. சில்லரை கடைகளில், 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தின் பல நகரங்களிலும் விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதியை, மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கடந்தாண்டு, ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement