இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (04) மாலை 5.30 மணிக்கு பங்களாதேஷின் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க டி சில்வா போட்டியின் முதலாவது மற்றும் இரண்டாவது போட்டிகளில் விளையாட மாட்டார். பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் காயம் காரணமாக இலங்கை – பங்களாதேஷ்; இடையிலான இருபதுக்கு 20 ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்.
இன்று ஆரம்பமாகும் முதல் டி20 போட்டியில் சரித் அசலங்க டி சில்வா இலங்கை அணிக்கு தலைமை தாங்க உள்ளதுடன், பங்களாதேஷ் அணி சார்பாக நஜிமுல் ஹொசைன் ஷான்டோ தலைமை தாங்குவார்.
இருபதுக்கு 20 மூன்றாவது போட்டியில் இருந்து மீண்டும் இலங்கை அணியை வனிந்து ஹசரங்க டி சில்வா வழிநடத்துவார்.
இலங்கையும் பங்களாதேஷ் அணியும் இதுவரை 11 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், இலங்கை ஏழு போட்டிகளிலும், பங்களாதேஷ் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
17 வீரர்கள் கொண்ட இலங்கை ஒருநாள் அணி…
வனிந்து ஹசரங்க (தலைவர்) சரித் அசலங்க (உப தலைவர்;) குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக, மஹீஷ் தீக்ஷன, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, டில்ஷான் மதுஷங்க, நுவன் துஷார, மதீஷ பத்திரன, அகில தனஞ்சய, பினூர பெர்னாண்டோ, கமிது மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் ஜெஃப்ரி வெண்டேஸ்கோ.