சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z9 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO Z9 5ஜி மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் டிமான்சிட்டி சிப்செட்டை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போனுக்கான விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் ஃபுள் ஹெச்டி AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமான்சிட்டி 7200 சிப்செட்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் திறன்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh பேட்டரி
- 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- இந்த போனுடன் சார்ஜரையும் சேர்த்து வழங்குகிறது iQOO
- யுஎஸ்பி டைப்-சி
- 5ஜி நெட்வொர்க்
- இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது. அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு நாளை முதல் இந்த போனை பெற முடியும்
Live the #FullyLoaded life with the new #iQOOZ9 5G – that keeps up with your everyday quests. Powered with MediaTek Dimensity 7200, Sony IMX 882 OIS Camera, and Segment’s Brightest AMOLED*, live the #FullyLoaded life. Starting at just ₹17,999*@amazonIN and… pic.twitter.com/4J4Vfs8z9W
— iQOO India (@IqooInd) March 12, 2024