காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதிக்கட்ட பகுதி மகாராஷ்டிராவிற்குள் வந்துள்ளது. துலேயில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அதில் பேசுகையில், ”காங்கிரஸ் வெற்றி பெற்றால் பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஏழைப்பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக்கி கொடுக்கப்படும். நாங்கள் மோடி அரசைப்போன்று வாக்குறுதி கொடுத்துவிட்டு நிறைவேற்றாமல் போகக்கூடியவர்கள் அல்ல.

நாங்கள் வெற்றி பெற்றால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி அதிகாரியை நியமித்து பெண்களுக்கான உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அதோடு அவர்களுக்கு சட்ட உதவிகளும் வழங்கப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சாவித்ரிபாய் புலே பெயரில் விடுதிகள் கட்டப்படும். நரேந்திர மோடி அரசு 22 தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு அநீதி இழைத்துள்ளது” என்றார்.
இதற்கு முன்பு நடந்த பொதுக்கூட்டங்களில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே 30 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஜனவரி 15ம் தேதி மணிப்பூரில் நியாய யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி வரும் 17ம் தேதி மும்பை வருகிறார். மும்பை சிவாஜி பார்க்கில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும்படி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, சரத் பவார் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். மும்பை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியா கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். ராகுல் காந்தி மும்பை வந்து சென்ற பிறகு மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்கு தடங்கலாக இருந்து வருகிறார். அவரின் வஞ்சித் பகுஜன் அகாடிக்கு அதிகபட்சமாக 5 தொகுதிகள் வரை தயாராக இருப்பதாக சிவசேனா மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY