Lok Sabha Elections 2024: Announcement of election date tomorrow evening | நாளை மாலை லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நடக்கும் தேதி விவரம் நாளை (மார்ச்-16) வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவிக்கின்றன.

நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் மற்றும் ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ளன. இதற்கான ஆயத்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து, தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முழுமை பெற்றுவிட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகிய இரு புதிய தேர்தல் கமிஷனர்கள் நேற்று நியமனம் செய்யயப்பட்டனர்.

இதனை தொடர்ந்து நாளை மாலை 3 மணியளவில் லோக்சபா தேர்தல் மாநிலம் வாரியாக தேதி விவரம் அறிவிக்கப்படும். இந்த ஓட்டுப்பதிவு பல கட்டங்களாக இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.