தங்கவயல், : ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் 89ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது.
கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் 86ம் ஆண்டு பிரம்மோற்சவம் நாளை துவங்குகிறது.
நாளை காலை 10:00 மணிக்கு துவஜரோஹனம், தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, தீர்த்த பிரசாத வினியோகம், இரவில் சிபிக வாகன உற்சவம்; 20ம் தேதி சிம்மம், 21ம் தேதி ஹனுமன், 22ம் தேதி சேஷ, 23ம் தேதி கருட வாகனம்.
வரும் 24ம் தேதி கஜேந்திர மோட்சம், 25ம் தேதி பிரம்ம ரத உற்சவம், 26ம் தேதி பார்வடோற்சவம், 27ம் தேதி ஹம்ச வாகனம், 28ம் தேதி சயனோற்சவம், 29ம் தேதி புஷ்ப பல்லக்கு, 30ம் தேதி முத்து மண்டபம் தேர் பவனி வருகிறது.
அனைத்து வாகன உற்சவமும் இரவில் நகர் வலம் கொண்டு வரப்படும். பிரம்ம ரத உற்சவம் மட்டும் காலை 6:50 மணிக்கு சிறப்பு பூஜையுடன்நடக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement