ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை இன்று தொடங்கியுள்ளார்கள். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கேற்ப எந்த ஆட்சி வந்தாலும் மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
Source Link