சென்னை: நடிகை தமன்னா கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்த அவர் பாலிவுட்டிலும் எண்ட்ரி ஆனார். அங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
