ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.