சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஏற்கனவே அறிவித்தபடி, பெண்களுக்கான பிங்க் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் […]
