நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. அனைத்து அணிகளும் தற்போது 10 போட்டிகள் வரை விளையாடி இருக்கிறது. புள்ளிப்பட்டியலில் மும்பை அணி முதல் இடத்திலும் பெங்களூரு அணி 2வது இடத்திலும் பஞ்சாப் மற்றும் குஜராத் அணி 3வது மற்றும் 4வது இடத்திலும் இருந்து வருகிறது.
பெரும்பாலும் இந்த 4 அணிகள் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் லக்னோ, டெல்லி உள்ளிட்ட அணிகள் இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வருகிறது. அதேசமயம், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணி அதிகாரப்பூர்வமாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு மும்பை அணி ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை என்றால், வேறு எந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை வெல்வதற்கான தகுதியே இல்லை. அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா இருப்பதைப் பற்றி மட்டும் நான் சொல்லவில்லை. அவர் மட்டுமே ஒரு பாகுபலி போல இருக்கிறார்.
அத்துடன் அந்த அணியில் போல்ட், தீபக் சாகர், வில் ஜாக்ஸ், ஹர்திக் பாண்டியா, கரண் சர்மா & கார்பின் ஜோஷ் ஆகியோர் உள்ளனர். அவர்களிடம் இந்த ஆண்டு கோப்பை வெல்வதற்கான அணி உள்ளது. இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆண்டு. எந்த அணியாலும் அவர்களை எட்டிப்பிடிக்க முடியாது.
அவர்கள் 6வது முறையாக கோப்பை வெல்வது நிச்சயம். மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள 11 பேருமே மேட்ச் வின்னர்கள்தான். அந்த அணி ஐந்து முறை கோப்பை வென்ற அணி. உலக தரம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். மூன்று சராசரியான ஐபிஎல் தொடர்களுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கிறது என்றார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கும் அஷ்வினுக்கும் சண்டை? ஹர்பஜன் சிங் சொன்ன அதிர்ச்சி!
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வரலாறு படைத்த ரோகித், இதுவரை யாரும் செய்யாத சாதனை..!!