கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு செல்வதற்குச் சாதிவாரி கணக்கெடுப்பு உதவும்.

மத்திய அரசே முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பு எடுப்பது வரவேற்கத்தக்கது. எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதைத் தேர்தலுக்காகத்தான் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எங்காவது தேர்தல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
இதைப் பீகார் தேர்தலுக்கான அறிவிப்பாகப் பார்க்க முடியாது. இதுபோன்ற விமர்சனங்களைத் தவிர்க்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். பொருளாதார முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பள்ளிகளில் தேர்வே வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகிறாரா? பிறகு எதற்காக 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு வைக்கிறார்கள்.
அப்படியே பாஸ் செய்யலாமே. எல்லாவற்றுக்கும் ஒரு அளவீடு தேவை. நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நீட் தேர்வைச் சமூகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையில் உள்ள பலரையும் அடிக்கடி மாற்றும் சூழல் ஏற்படும்.
சமூகத்தில் ஒவ்வொரு நாளும் போதை பழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. அதற்குச் சட்டமன்றத்தில் அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையே சான்று.

சாதிவாரி கணக்கெடுப்பு தன்னால்தான் அறிவிப்பு வந்தது என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இது யாரோ பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைப்பதில் என்ன கஷ்டம் என்பது போல உள்ளது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb