ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி வெகு விமரிசையாக தொடங்க உள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் வரும் 8-ம் தேதி முதல் வர தொடங்குகின்றனர்.
உலக அழகி போட்டிகள் நடைபெற உள்ள இடங்களை ‘மிஸ் வோர்ல்டு லிமிடெட்’ தலைமை செயல் அதிகாரி ஜூலியா இவேலின் மோர்லி நேற்று பார்வையிட்டார்.
மே 10-ல் ஹைதராபாத் கச்சிபவுலி விளையாட்டு அரங்கில் மாநில சுற்றுலா துறை சார்பில் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெற உள்ளன.