CSK vs RCB Fans Fight : சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சனிக்கிழமை இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி பந்தில் வெற்றியை உறுதி செய்தது. டாஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி தான் வெற்றி பெற்றார். பெங்களூரு மைதானம் சிறியது என்பதால் சேஸிங் செய்யலாம் என நினைத்து பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 62 ரன்களும், ஜேக்கப் பெத்தல் 53 ரன்களும் குவித்தனர்.
கடைசி இரண்டு ஓவர்களில் ஆர்சிபி அணியின் ரோமாரியோ ஷெப்பர்டு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினார். பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் சிக்சர் பவுண்டரிகளுமாக பறக்க 13 பந்தில் அரைசதம் அடித்தார். மொத்தம் 14 பந்துகள் மட்டுமே ஆடிய ஷெப்பர்டு 6 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் விளாசி 53 ரன்கள் குவித்தார். அதாவது சிஎஸ்கே அணி கடைசி 2 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதன்பிறகு பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதிலடி கொடுத்தது. ஆயுஷ் மான்ரே 93 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 77 ரன்களும் எடுக்க சென்னை அணி வெற்றிக்கு மிக அருகில் வந்தது.
ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடி காட்டாமல் இருந்ததால் வெறும் 2 ரன்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இதில் அம்பயர் செய்த தவறுகளும் சென்னை அணியின் வெற்றிக்கு பெரும் தடையாக அமைந்துவிட்டது. டெவால்டு ப்ரீவிஸூக்கு கள நடுவர் ஆர்சிபி அணியின் எல்பிடபள்யூ அப்பீலுக்கு அவுட் கொடுத்தார். அப்போது உடனே ப்ரீவிஸ் ரிவ்யூ கேட்காமல் 2 ரன்கள் ஓடி முடித்த பிறகு ரிவ்யூ கேட்டார். ஆனால், ரிவ்யூவிற்கான டைம் முடிந்துவிட்டது என நடுவர் கூறியதால் வேறுவழியின்றி டெவால்டு ப்ரீவிஸ் களத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. அதன்பிறகு டிவி ரிப்ளேவில் அந்த எல்பிடபள்யூ அவுட்டே இல்லை என்பது தெரிந்தது. இதனால் சிஎஸ்கே அணி கடும் அதிருப்தி அடைந்தது.
சிஎஸ்கே ரசிகர்களை மிரட்டிய ஆர்சிபி ரசிகர்கள்
May 4, 2025
இது ஒருபுறம் இருக்க பெங்களூரு மைதானத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே ரசிகர்களிடம் கலாட்டாவில் ஈடுபட்டனர். மைதானத்துக்கு வெளியே வந்தபிறகும் சிஎஸ்கே டீ சர்ட் போட்டிருந்த ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் தேடிச் சென்று வலுக்கட்டாயமாக வம்பிழுத்தனர். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதனைப் பார்த்த பலரும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே ரசிகர்கள் கூட இப்படி ஒருமுறை கூட நடந்து கொண்டதில்லை. ஆனால் ஒருமுறை கூட கப் அடிக்காத ஆர்சிபி ரசிகர்கள் நடத்தை எரிச்சலூட்டுவதாக இருப்பதாகவும், இதனாலேயே அந்த அணி ஐபிஎல் தொடரில் கப் அடிக்கக்கூடாது என்றும் சாபம் விட்டு வருகின்றனர். சில இடங்களில் சிஎஸ்கே ரசிகர்களிடம் மோதல் போக்கில் ஈடுபட்ட ஆர்சிபி ரசிகர்களை காவல்துறை தலையிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் படிங்க: மும்பை ரசிகர்களுக்கு ஷாக்.. அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!