நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 56வது லீக் ஆட்டம் இன்று (மே 07) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டது. அதனை வென்ற குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரிகில்டன் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கிய நிலையில், இருவரும் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்தது வெளியேறினர். இதையடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நின்று அணிக்கு ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழந்தாலும், வில் ஜாக்ஸ் தொடர்ந்து ரன்களை சேர்த்து அரைசதம் அடித்தார்.
அவரும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா 1, நமன் தீர் 7, கார்பின்ம் போஸ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 155 ரன்கள் சேர்த்தது. குஜராத் டைடன்ஸ் அணி சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்களையும் மற்ற பந்து வீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து குஜராத் அணி 156 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நிலையில், தொடக்கத்திலேயே சாய் சுதர்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அவரை தொடர்ந்து களம் வந்த ஜோஸ் பட்லர் கில்லுடன் கைகோர்த்து ரன்களை சேர்க்க தொடங்கினார். இந்த கூட்டணி அணிக்கு நம்பிக்கையை அளித்தது. ஒரு கட்டத்தில் ஜோஸ் பட்லர் 30 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் வந்து ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து ரூதர்ஃபோர்ட் 28 ரன்களில் போல்ட் பந்து வீச்சில் எல்பிடபில்யூ ஆனார். கடைசி 4 ஓவரில் 39 ரன்கள் அடித்த வேண்டி இருந்தது. பும்ரா சாருக் கான் விக்கெட்டை வீழ்த்தினார். இதையடுத்து வந்த ரஜித் கானும் வெளியேறினார். ஆனால் மறுபக்கம் திவாட்டியா நின்று அணிக்கு நம்பிக்கை அளித்தார். 2 ஓவர்களுக்கு 24 ரன்கள் தேவை என்ற நேரத்தில் மழை குறிக்கிட்டது.
பின்னர் மழை நின்ற நிலையில் போட்டியில் ஒரு ஓவரை குறைத்து 1 ஓவருக்கு 15 ரன்கள் அடித்தால் வெற்றி என நிர்ணயக்கப்பட்டது. அதனை குஜராத் டைடன்ஸ் அணி அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
மேலும் படிங்க: இதனால்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகினேன்.. உண்மை போட்டுடைத்த கோலி!
மேலும் படிங்க: இறுதி கட்டத்தில் ஐபிஎல் 2025.. பிளே ஆஃப் செல்லப்போகும் அந்த 4 அணி எது?