Paytm ‘Hide Payment’ Feature: ஆன்லைன் கட்டண செயலியான Paytm, ‘கட்டணத்தை மறை’ அதாவது ‘பேமண்ட் ஹைட்’ என்ற புதிய மற்றும் தனியுரிமை சார்ந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் இப்போது தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளை கட்டண வரலாற்றிலிருந்து மறைக்க முடியும். மேலும் தேவைப்படும்போது அவற்றை மீண்டும் காட்டவும் முடியும். இது தங்கள் தனிப்பட்ட அல்லது சர்ப்ரைஸ் பேமெண்டுகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த விரும்பாத பயனர்களுக்கு பயனளிக்கும்.
Hide Payment அம்சம் என்றால் என்ன?
Paytm இன் புதிய Hide Payment அம்சம் பயனர்கள் தங்கள் பரிவர்த்தனை வரலாற்றிலிருந்து, அதாவது டிரான்சாக்ஷன் ஹிஸ்டரியிலிருந்து சில கட்டணங்களை மறைக்க அனுமதிக்கிறது. இந்த அம்சம் தங்கள் சில முக்கிய செலவுகள் அல்லது ஷாப்பிங்க் விவரங்களை யாருக்கும் வெளிப்படுத்த விரும்பாத பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அம்சத்தின் நன்மைகள் என்னவாக இருக்கும்?
இந்த அம்சத்தில் பல வித நன்மைகள் உள்ளன. அவற்றில் சில இதோ:
– சர்ப்ரைஸ் கிஃப்டை வெளிப்படுத்தாமல் மறைக்க இந்த அம்சம் உதவும்.
– தனிப்பட்ட செலவுகள் அல்லது அத்தியாவசிய மருந்துகளை வாங்குவது ரகசியமாக வைக்கப்படலாம்.
– உங்கள் பரிவர்த்தனை வரலாற்றின் மீது உங்களுக்கு அதிக கட்டுப்பாடு இருக்கும்.
– பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பராமரிக்கப்படும்.
பரிவர்த்தனையை எப்படி மறைப்பது?
இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
– முதலில் Paytm செயலியைத் திறந்து “Balance & History” பகுதிக்குச் செல்லவும்.
– நீங்கள் மறைக்க விரும்பும் பரிவர்த்தனையில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.
– “Hide”” விருப்பத்தை டேப் செய்யவும்.
– “ஆம்” என்பதைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.
– இப்போது அந்த பரிவர்த்தனை உங்கள் வரலாற்றில் தெரியாது.
மறைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை எவ்வாறு மீட்டெடுப்பது?
– Paytm செயலியைத் திறந்து, “Balance & History” என்ற இடத்திற்குச் செல்லவும்.
– மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைத் டேப் செய்யவும்.
– “View Hidden Payments” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் பின் அல்லது கைரேகை மூலம் வெரிஃபை செய்யவும்.
– மறைக்கப்பட்ட பரிவர்த்தனைகளில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்
– “Unhide” என்பதை டேப் செய்யவும்.
– இப்போது உங்கள் மறைக்கப்பட்ட பரிவர்த்தனை மீண்டும் உங்கள் வரலாற்றில் தோன்றத் தொடங்கும்.
ஆன்லைன் கட்டண செயலியான Paytm இன் இந்தப் புதிய ‘கட்டணத்தை மறை’ (Hide Payment) அம்சம் தனியுரிமை அடிப்படையில் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்லைன் பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் தங்கள் தனிப்பட்ட செலவுகள் தொடர்பாக தனியுரிமையைப் பராமரிக்க விரும்பும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.