அகமதாபாத் விமான விபத்தில் ஆயுள் காப்பீடு செய்தவரும் நியமனதாரரும் இறப்பு: இழப்பீடு வழங்குவதில் சிக்கல்

அகமதாபாத்: ஏர் இந்​தியா விமான விபத்​தில் பயணம் செய்த பெரும்​பாலான காப்​பீட்​டு​தா​ரரும், அவர் நியமித்த நாமினி​யும் ஒருசேர உயி​ரிழந்​துள்​ளனர். இதனால், இழப்​பீட்டு தொகையை வழங்குவதில் காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மிகப்​பெரிய குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. ஜூன் 12-ம் தேதி அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது.

விமானத்​தில் பயணம் செய்த 241 பேர், கட்​டிடத்​துக்​குள் இருந்த 29 பேர் என மொத்​தம் 270 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் குடும்​பத்​துடன் லண்​டன் சென்​றபோது இந்த துயர சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

விபத்து ஏற்​பட்​ட​வுடன் இந்​திய காப்​பீட்டு ஒழுங்​கு​முறை மற்​றும் மேம்​பாட்டு ஆணை​யம் (ஐஆர்​டிஏஐ), காப்​பீட்டு நிறு​வனங்​களை தொடர்பு கொண்டு காப்​பீடு செய்​தவர்​களுக்கு உடனடி​யாக இழப்​பீடு​களை வழங்​கு​மாறு அறி​வுறுத்​தி​யுள்​ளது. இந்த நிலை​யில் காப்​பீடு வழங்​கு​வது தாமதப்​படுத்​தப்​பட்டு வரு​வ​தாக எழுந்த குற்​றச்​சாட்​டுக்கு காப்​பீட்டு நிறு​வனங்​கள் மறுப்பு தெரி​வித்​துள்​ளன.

காப்​பீடு எடுத்​துக் கொண்ட பாலிசி​தா​ரர் மற்​றும் அவரது நாமினி என இரு​வருமே இந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​த​தால் காப்​பீட்டு தொகையை யாரிடம் வழங்க வேண்​டும் என்​ப​தில் பெரும் சிக்​கலை சந்​தித்து வரு​வ​தாக நிறு​வனங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து காப்​பீட்டு நிறு​வனங்​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: விரை​வாக காப்​பீடு கிடைப்​பதை உறுதி செய்ய எல்​ஐசி, நியூ இந்​தியா அஷ்யூரன்​ஸ், எச்​டிஎப்சி லைப், இப்​கோ டோக்​கியோ, பஜாஜ் அலை​யன்ஸ் போன்ற நிறு​வனங்​கள் அகம​தா​பாத் மருத்​து​வ​மனை வளாகத்​திலேயே உதவி மையங்​கள் அமைத்​துள்​ளன.

அதி​காரி​கள் வழங்​கிய பட்​டியலின் அடிப்​படை​யில் தரவு​களை உறுதி செய்து பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு இழப்​பீட்டை வழங்க வேக​மாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளன. இருப்​பினும், இந்த விபத்​தில் பாலிசி​தா​ரர், நாமினி ஆகிய இரு​வருமே உயி​ரிழந்​துள்​ள​தால் உரிய பயனாளி​களை தேர்வு செய்​வ​தில் சிக்​கல் எழுந்​துள்​ளது. அதற்​கான தீர்​வு​களுக்​காக சட்ட நிபுணர்​களு​டன் ஆலோசித்து வரு​கிறோம். இவ்​வாறு காப்​பீட்டு நிறு​வனங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.