சிறையில் முதல் நாளில் கதறி அழுத பிரஜ்வல் ரேவண்​ணா: தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​பட்ட நிலை​யில், சிறையில் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதுகுறித்து சிறைத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் சாகும் வரை ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ளது. இதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்ட நிலை​யில், தண்​டனைக்​கான முதல் இரவை அவர் சிறை​யில் கழித்​தார். கண்​ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்​சலுடன் காணப்​பட்​டார். அவரது உடல்​நிலை சீராக இருப்​பதை உறுதி செய்​வதற்​காக சிறை மருத்​து​வர்​கள் அன்று இரவு அவரது உடல்​நிலையை பரிசோ​தித்​தனர். அப்போது, தனது வேதனை​களை மருத்துவர்களிடம் அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ள​தாக​வும் பிரஜ்வல் ரேவண்ணா கூறி​யுள்​ளார்.

கைதி எண் 15528 ஒதுக்கீடு: முன்​னாள் எம்​.பி. என்​ப​தால் தற்​போது அவர் உயர் பாது​காப்பு அறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்​டுமே அணிய வேண்​டும். நேற்று காலை அவருக்கு அதி​காரப்​பூர்​வ​மாக கைதி எண் 15528 ஒதுக்​கப்​பட்​டது. இவ்​வாறு சிறைத் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.