சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: ஒரு சுற்று மீதம்.. சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த ஜெர்மனி வீரர்

சென்னை,

3-வது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று 8-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

அதன்படி மாஸ்டர்ஸ் பிரிவில் நடந்த ஜெர்மனியின் வின்சென்ட் கீமர்- ஜோர்டான் வான் பாரஸ்ட் (நெதர்லாந்து) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் இந்திய வீரர்களான அர்ஜூன் எரிகைசி – விதித் குஜராத்தி இடையிலான ஆட்டமும் சமனில் முடிந்தது.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதமிருக்கும் நிலையில் வின்சென்ட் கீமர் 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் உறுதி செய்தார். அர்ஜூன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி தலா 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.