சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை சைதாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் கட்​டப்​பட்​டுள்ள கட்​டிடம் மற்​றும் மருத்​துவ உபகரணங்​களை சுகா​தா​ரத்துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்ரா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த அரசு மருத்​து​வ​மனை 120 ஆண்​டு​களைக் கடந்த ஒரு பழமை​யான மருத்​து​வ​மனை ஆகும். இந்த மருத்​து​வ​மனை​யில் சைதாப்​பேட்​டை​யில் இருப்​பவர்​கள் மட்​டுமின்​றி, மடிப்​பாக்​கம், உள்​ளகரம், புழு​தி​வாக்​கம், பள்​ளிக்கரணை, ஜல்​லடியான்​பேட்​டை, சோழிங்​கநல்​லூர், அக்​கரை போன்று பல்​வேறு இடங்​களி​லிருந்​தும் சிகிச்சை பெற்​றுச் செல்​கின்​றனர். ரூ.28.70 கோடி​யில் 68,920 சதுர அடி பரப்​பள​வில் புதிய கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது.

தரைத்​தளம் மற்​றும் 6 தளங்​கள் கொண்ட இந்​தக் கட்​டிடத்​தில் பல்​வேறு வசதி​கள் வரவுள்​ளன. ரோட்​டரி சங்​கத்​தின் சார்​பில் 14 டயாலிசிஸ் இயந்​திரங்​கள் தற்​போது மருத்​து​வ​மனை​யில் பயன்​பாட்​டில் உள்​ளன. சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களி​லிருந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரு​கிறார்​கள். ஒரு​வருக்கு டயாலிசிஸ் செய்ய 4 மணி நேரம் ஆகும். அந்த வகை​யில் தின​மும் 3 பிரிவு​களாக இந்த இயந்​திரங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன.

இதனை அதி​கரிக்க ரோட்​டரி சங்க நிர்​வாகி​களிடம் மேலும் 11 டயாலிசிஸ் இயந்​திரங்​களை கேட்​டிருக்​கிறோம். இந்த கட்​டிடம் பயன்​பாட்​டுக்கு வரும்​போதே 25 டயாலிசிஸ் இயந்​திரங்​கள் பயன்​பாட்​டில் இருக்​கும். இந்த மருத்​து​வ​மனை​யில் ரூ.1 கோடி செலவில் அதிநவீன வசதி​களு​டன் கூடிய ரத்த வங்கி ஒன்றை ரோட்​டரி சங்​கம் ஏற்​படுத்​தித் தரவுள்​ளது. அடுத்த மாதம் முதல் வாரத்​தில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் இந்த மருத்​து​வ​மனை​யின் புதிய கட்​டிடத்தை பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரவுள்​ளார். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.