போக்குவரத்து ஓய்வூதியருக்கு ரூ.1,137 கோடி ஒதுக்கீடு

சென்னை: ஓய்​வூ​தி​யர் பணப்​பலன் வழங்​கு​வதற்​காக ரூ.1,137 கோடியை போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு தற்​காலிக முன்​பண​மாக (கடன்) தமிழக அரசு வழங்​கி​யுள்​ளது. போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றால், பிற அரசுத்​துறை ஊழியர்​களைப் போல ஓய்​வு​பெறும் நாளில் பணப்​பலன் வழங்​கப்​படு​வ​தில்​லை.

அதன்​படி, போக்​கு​வரத்​துக் கழகங்​களில் பணி​யாற்றி கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வு பெற்​றவர்​களுக்கு தற்​போது வரை பணப்​பலன் வழங்​கப்​பட​வில்​லை. இதனால் சிஐடியு சார்​பில் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய அளவில் தொடர் காத்திருப்பு போ​ராட்​டம் முன்​னெடுக்​கப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக பணப்​பலன் வழங்​கு​வது தொடர்​பான அரசாணை வெளியானது.

இதுதொடர்​பாக போக்​கு​வரத்​துத் துறைச் செயலர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்குவரத்துக் கழகங்​களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்​பாண்டு ஜனவரி வரை ஓய்​வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்​காலத்​தில் மரணமடைந்​தவர்​களுக்​கும் பணப்​பலன் வழங்​கும் வகை​யில் நிதி​யுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலை​வர் கடிதம் அனுப்​பி​யிருந்​தார்.

இதை பரிசீலித்த அரசு, ரூ.1,137.97 கோடியை தற்​காலிக முன்​பண​மாக (கடன்) போக்​கு​வரத்​துக் கழகங்​களுக்கு வழங்கி ஆணையிடுகிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.